யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரி பணியிடம்

  யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 300 நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாட்டின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 300 நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 21-30-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் 17-ம் தேதியாகும். இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு http://www.uiic.co.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும். Likes(0)Dislikes(0)

Share Button