home செய்திகள் தேவர் திருமகனாரின் 110-வது ஜெயந்தி விழா : திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட அகில இந்திய முக்குலத்தோர் பாசறை சார்பில் மாலை அணிவித்து மரியாதை

தேவர் திருமகனாரின் 110-வது ஜெயந்தி விழா : திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட அகில இந்திய முக்குலத்தோர் பாசறை சார்பில் மாலை அணிவித்து மரியாதை

தேவர் திருமகனாரின் 110வது ஜெயந்திவிழாவையொட்டி, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது திருவுருவச் சிலைக்‍கு மாவட்ட அகில இந்திய முக்‍குலத்தோர் பாசறை சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக பாவித்து வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 110வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருச்சி மாவட்ட அகில இந்திய முக்‍குலத்தோர் பாசறை சார்பில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள தேவர் திருமகனார் திருவுருவச் சிலைக்‍கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, அன்னதானமும் வழங்கப்பட்டது. ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். சதியை முறியடித்து, தேவர் திருமகனாரின் தங்கக்‍ கவசம் உரிய நேரத்தில் கிடைக்‍க நடவடிக்‍கை மேற்கொண்ட கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்‍கு பாசறை சார்பில் நன்றி தெரிவிக்‍கப்பட்டது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்‍கு, கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக, தாராநல்லூர் பகுதியிலிருந்து 500-க்‍கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி ஏந்தி ஊர்வலமாகச் சென்று, தேவர் திருமகனாரின் சிலையை வணங்கி மரியாதை செலுத்தினர்.

Share Button
Likes(0)Dislikes(0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *