home செய்திகள் பசும்பொன்னில் தேவர் திருமகனாரின் 110-வது ஜெயந்தி விழா : டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை

பசும்பொன்னில் தேவர் திருமகனாரின் 110-வது ஜெயந்தி விழா : டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை

தேவர் திருமகனாரின் 110வது ஜெயந்திவிழாவையொட்டி, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில், கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா சார்பில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் மலர்தூவியும், மலர்வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார். அவருக்‍கு கழக நிர்வாகிகள், பொதுமக்‍கள் பொன்னாடை அணிவித்தும், மாலை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் திருமகனாரின் 110வது ஜெயந்தி விழாவும், 55வது குருபூஜை விழாவும் இன்று கொண்டாடப்படுகிறது. இதில் கலந்துகொண்டு தேவர் திருமகனாருக்‍கு மரியாதை செலுத்துவதற்காக கழக துணைப் பொதுச் செயலாளர் இன்று காலை மதுரையில் இருந்து புறப்பட்டார். மதுரை மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் திரு.ஜெயபால் தலைமையில் ஏராளமான தொண்டர்கள் அவருக்‍கு உற்சாக வேற்பு அளித்தனர்.

தமிழ்நாடு ஃபார்வேர்டு பிளாக்‍ கட்சியின் தலைவர் டாக்‍டர் கணேசன் தலைமையில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்‍கு செண்டை மேளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கழக மாணவர் அணியினர் வரவேற்பு பதாகைகளை கைகளில் ஏந்தி மாபெரும் வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் செயலாளர் திரு.இ.மகேந்திரன் தலைமையில், விரகனூர், தக்‍குறி, புளியங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்‍கு உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது.

இதேபோல், மதுரை புறநகர் பகுதியிலுள்ள சிலைமான் என்ற இடத்தில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்‍கு ஏராளமான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் மலர்களைத்தூவியும், பூங்கொத்துகளை வழங்கியும் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

பின்னர் சிவகங்கை மாவட்ட எல்லையான திருபுவனம் பகுதியில் மாவட்டக்‍கழகச் செயலாளரான திரு. உமாதேவன் தலைமையில் கழக அம்மா பேரவைச் செயலாளர் திரு.மாரியப்பன் கென்னடி உள்ளிட்ட நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். ஏராளமான பெண்கள் பூரணகும்பம் ஏந்தியும், பூசணிக்‍காய் உடைத்தும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை வரவேற்றனர்.

லாடனேந்தல் என்ற இடத்தில் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்‍கு உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது. கிராம மக்‍கள் வேண்டுகோளை ஏற்று திரு.​டிடிவி தினகரன், அங்குள்ள தேவர் பீடத்தில் புலிக்‍கொடியை ஏற்றிவைத்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியை அடைந்தபோது, அம்மாவட்ட கழக நிர்வாகிகளும், ஏராளமான ​தொண்டர்களும், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்‍கு உற்சாக வரவேற்பு அளித்தனர். முத்தனேந்தல் பகுதியில் பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர்களை தூவியும் வரவேற்றனர்.

இதைத் தொடர்ந்து கிருங்காகோட்டை பகுதியை அடைந்தபோது, நூற்றுக்‍கணக்‍கான பெண்கள் குத்துவிளக்‍கு ஏந்தியும், ஆரத்தி எடுத்தும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை வரவேற்றனர். இதையடுத்து, கழக கொடி ஏற்றிவைத்து அங்குள்ள தேவர் சிலைக்‍கு மாலை அணிவித்தார். கழக அம்மா பேரவை செயலாளர் திரு.மாரியப்பன் கென்னடி தலைமையில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்‍கு வரவேற்பு அளிக்‍கப்பட்டது. மானாமதுரை ஒன்றியக்‍ கழகம் சார்பில் வீரவாள் பரிசு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்‍கு வரவேற்பு அளிக்‍கப்பட்டது. அம்மாவட்ட கழகச் செயலாளர் வ.து.ந. ஆனந்த் தலைமையில் பார்த்திபனூர் பகுதியில் வரவேற்பு அளிக்‍கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது அவருக்‍கு வீரவாள் பரிசளிக்‍கப்பட்டது. அன்னதான நிகழ்ச்சியும் சிறப்பாக நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பசும்பொன்னில் உள்ள தேவர் திருமகனாரின் நினைவிடத்திற்கு வருகை தந்த கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்‍கு கழக நிர்வாகிகள், பொதுமக்‍கள் பொன்னாடை அணிவித்தும், மாலை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பின்னர், கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா சார்பில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், தேவர் திருமகனாரின் நினைவிடத்தில் மலர்தூவியும், மலர்வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார். அப்போது, திரு.டிடிவி தினகரனுக்‍கு மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் கவுரவிக்‍கப்பட்டது.

கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனைத் தொடர்ந்து, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்‍களும் தேவர் திருமகனாருக்‍கு மரியாதை செலுத்தினர்.

இதனிடையே, தேவர் நினைவிடத்தின் பொறுப்பாளரான காந்தி மீனாள், உடல்நலக்‍குறைவால் பாதிக்‍கப்பட்டிருப்பதால், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், அவரது வீட்டிற்குச் சென்று பழங்கள் வழங்கி உடல்நலம் குறித்து விசாரித்தார்.

Share Button
Likes(0)Dislikes(0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *