home செய்திகள் பன்னீர் செல்வம்- சசிகலா இவர்களில் நாம் யார் பக்கம் நிற்க வேண்டும் ?

பன்னீர் செல்வம்- சசிகலா இவர்களில் நாம் யார் பக்கம் நிற்க வேண்டும் ?

Athiyaman Thamuka

 

 

பன்னீர் செல்வம்- சசிகலா இவர்களில் நாம் யார் பக்கம் நிற்க வேண்டும் ?

குடும்பத்திற்குள் ஒரு பிரச்சனை என்றால் கூட பஞ்சாயத்திற்கு வருபவர்கள் ஒரு தீர்வு சொல்ல வேண்டும் அந்த தீர்வு குடும்பத்தின் எதிர்காலம் கருதி எடுக்கப்பட தீர்வாக இருக்க வேண்டும்

ஒருவருக்கோ ஒரு கட்சிக்கோ, யார் வேண்டுமானாலும் சிக்கலை உருவாக்கலாம். சிலரால் மட்டுமே மிகப்பெரிய சிக்கலை உருவாக்க முடியும். எல்லோராலும் சிக்கலை சமாளிக்க முடியும் ஆனாலும் ஒரு சிலரால் மட்டுமே மிகப்பெரிய சிக்கலை எதிர் கொள்ள முடியும். செயலலிதா என்பவர் நல்லவரா ? கெட்டவரா? என்பதை கடந்து, தனக்கு வந்த பல சிக்கல்களை சவாலாக ஏற்று சந்தித்தித்தார்,பல வற்றில் வெற்றி கண்டார்

செயலலிதா குறித்து நம்ம எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் சொன்ன கருத்தும் இதுதான் (அதில் பெரும்பகுதி திமுகவால் வந்தது என்பது ஸ்டாலினுக்கே தெரியும் ,அனைவருக்கும் தெரியும். அவரைப்போல எவராலும் அவ்வளவு பெரிய சிக்கல்களை சமாளிக்க முடியாது என்று எண்ணியவர்கள் அவருக்கு கீழ்படிந்து இருந்தார்கள்

இன்றைய சூழலில் சசிகலாவிற்கு நெருக்கடி கொடுப்பதாக எண்ணி அதிரடியாக செயல்பட்டு விட்டார் ஒ பி எஸ் .
சசிகலாவால் மட்டுமே அதிமுக கட்சியை காப்பாற்ற முடியும், என ஒ பி எஸ் உட்பட அதிமுக காரர்கள் ஒவ்வொரு முறை சொல்லும் போதும் அதனை ஒரு செய்தியாக காதில் போட்டவர்கள் இப்போது ஆம் அது உண்மைதான் என சொல்லும் நிலை உருவாகியுள்ளது.
ஆக பன்னீர் செல்வம் எடுத்த முடிவினால் சசிகலாவை நம்பி சென்றவர்களிடம் மதிப்பு அதிகரித்து விட்டது சசிகலாவிற்கு படிக்கட்டாக அமைந்து விட்டது

பன்னீர் செல்வம் அவர்களுக்கு மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை அத்தோடு திமுக, இந்தியாவை ஆளுகின்ற பா ச க, காங்கிரஸ் ஒரு தரப்பு , பா ம க , நாம் தமிழர் , நடிகர்கள் நடிகைகள் கமலஹாசன் ஆர்யா எஸ் வி சேகர் சித்தார்த் கருணாநிதியின் பேரன் அருள் நிதி ,மன்சூர் அலிகான் , ராஜேந்தர் ,குஸ்பு ,கவுதமி ,தினமலர் இந்து போன்ற ஊடகங்கள் ஆதரவு கிடைத்துள்ளது

இவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பதால் அவர் முதல்வராகி விட முடியுமா ?
இன்று சசிகலாவை பிடிக்காமல் எதோ அவசர சூழ்நிலையில் ஆதரிக்கும் இவர்கள் நாளை தேர்தல் வரும்போது என்ன செய்வார்கள் ?

தேர்தல் வந்தால் போட்டியிட ஒரு கட்சி கட்டமைக்க வேண்டும் . அந்த கட்சி வளர திமுக வை கண்டபடி திட்ட வேண்டும் .கருணாநிதியை ஜெயலலிதா பேசுவது போல, ஸ்டாலினை பன்னீர் செல்வம் பேச வேண்டும். திமுக வை பிரித்து மேய வேண்டும் . அப்போதுதான் அவர் கட்சி வளரும். ஆம் அப்படி ஒரு எழுதப்படாத சட்டம் அங்கு இருக்கிறது . அப்படி அவர் செய்வாரா ? செய்யாத போது அதிமுக கட்சியினரிடம் இவர் எப்படி பெயர் வாங்க முடியும் ?

அவர் எடுத்த முடிவின் காரணமாக பொது தேர்தல்
வந்தால் என்ன நடக்கும் ? திமுக ஆட்சிக்கு வந்துவிடும் . அப்போது மக்கள் என்ன சொல்வார்கள் ? அதிமுக அடிமட்ட தொண்டர்கள் என்ன சொல்வார்கள் இருப்பதையும் கெடுத்தவர் பன்னீர் செல்வம் என்பார்கள். திமுக அல்லாது இப்போது ஆதரிக்கின்ற கட்சிகள் என்ன சொல்வார்கள். நாங்கள் எத்தனை முறை தனித்து போட்டியிட்டு பார்த்திருக்கிறோம்.. என கிண்டலாக நினைத்துக் கொள்வர்

தமிழகத்தில் பா ஜ க மீதுள்ள கடும் எதிர்ப்பு ,திமுக மீதுள்ள அதிமுக வினரின் எதிர்ப்பு, ஆக இந்த இரண்டு விசயங்களும் சசிகலாவிற்கு கை கொடுக்குமே தவிர பன்னீர் செல்வத்திற்கு கை கொடுக்காது

கணக்கு கேட்ட எம் ஜி அரை கட்சியை விட்டு நீக்கியது திமுக.அவர் தேர்தலை எதிர் கொண்டார். பிரபல நடிகர் என்பதால் அவருக்கு மக்கள் வாக்களித்தார்கள் , பன்னீர் செல்வம் அவர்கள் முதல்வராக இருந்தவர் என்பதை மட்டும் தனக்கான முதன்மை தகுதியாக நினைக்கலாமா ? ,அதனை பெருமைப்பட நினைத்தால், அந்த பெருமை ஒரு புதிய கேள்வியை உருவாக்கும் ! எப்போது ?எந்த சூழலில் அவர் முதல்வரானார் ? “செயலலிதா சிறை செல்லும் போதெல்லாம் முதல்வராக இருந்தார் ” ஜெயலலிதா ஏன் சிறை சென்றார் ? ஆக செயலலிதா சிறைக்கு சென்றதை புகழ்ந்து பேச சசிகலாவாலும் முடியாது, பன்னீர் செல்வத்தாலும் முடியாது இதெல்லாம் ஜல்லிக்கட்டுக்காக களம் இறங்கிய மாணவர்களுக்கு இளைஞ்சர்களுக்கு தெரியாதா ? பன்னீர் செல்வம் என்ன பசும்பொன்  தேவரை  போன்று ஊழலை எதிர்த்தவரா ?

இப்படிப்பட்ட ஒரு கட்சி அந்த கட்சியின் சுய நலத்திற்க்காக தன் தனிப்பட்ட சுய நலத்திற்க்காக ஒரு தலைமையின் கீழ் நின்று செயல்படுவது என்பதே சரியான முடிவு . நல்ல முடிவு . தெளிவான முடிவு இந்த நிலையிலிருந்து மாறுபட்டு யார் சிந்தித்தாலும் அக் கட்சியினரின் எதிர்காலம் கேள்வி குறியாகி விடும்

ஒரு ஆட்சி நம் கையில் இருக்கிறது. சசிகலா, பன்னீர் செல்வம் உட்பட யாருக்கும் மக்களிடம் நல்ல பெயர் இல்லை ( பன்னீர் செல்வத்திற்த்க்கான நல்ல பெயரில் சசிகலாவிற்கு பங்கு உண்டு ) அந்த ஆட்சியினால் பொது மக்களிடம், மாணவர்களிடம் இளைஞ்சர்களிடம் இனி உருவாகப்போகும் நல்ல பெயரில்தான் தங்கள் எதிர்காலம் அடங்கி இருக்கிறது, இந்த நிலையில் அந்த ஆட்சியை “கிடைப்பதற்கு அரிய பொக்கிசமாக” பாதுகாக்க வேண்டியதே ஒட்டு மொத்த அதிமுக காரர்களின் கடமை

சசிகலா நல்லவரா ? பன்னீர் செல்வம் நல்லவரா ?என்றால் இருவருமே நல்லவர்கள் இல்லை. ஆம் ஜெயலலிதாவே நமக்கு நல்லவராக தெரியாத போது இவர்கள் எப்படி நல்லவராக படுவார்கள். அவர்கள் இனி நல்லவர்களாக மாற வேண்டும்
.
இந்த நேரத்தில் பன்னீர் செல்வம் அவர்கள் எடுத்த முடிவு தவறானது அவரை ஆதரிப்பவர்கள் முடிவும் தவரானது. இதனை காலம் சொல்லும் சசிகலா முதல்வராக அமர்வதே நல்லது இந்த சூழ் நிலைக்கு நல்லது, நம் தமிழ் இன நலத்திற்கு நல்லது

இது ஒரு முக்கியமான காலகட்டம் இந்த காலத்தில் இப்படியான முடிவே மிகச் சரியானது. அம் முடிவு ஒருபக்கமாக இருக்கிறது என சாக்கு போக்கு சொல்லி திமுக விற்கு இடம் கொடுப்பது தமிழர் நலத்திற்கு முற்றிலும் எதிரானது அதற்கு நாம் தயாராக இருக்க கூடாது நாம் ஈழத்தில் படுகொலையான நம் உறவுகளின் ஆன்மாக்களிளிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் நாம் சூழ்ச்சிக்கு பலிகடா ஆனவர்கள்! இனி ஆக கூடாது

அதியமான்

Share Button
Likes(2)Dislikes(0)

One thought on “பன்னீர் செல்வம்- சசிகலா இவர்களில் நாம் யார் பக்கம் நிற்க வேண்டும் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *