home முகநூல் பதிவுகள் இவங்க சொல்ரமாதிரி நிரந்தர சட்டம்னு ஒன்னு கெடையாது.

இவங்க சொல்ரமாதிரி நிரந்தர சட்டம்னு ஒன்னு கெடையாது.

“அவசரச்சட்டம் பத்தாது. நிரந்தரச்சட்டம்தான் எங்களுக்கு வேணும்” னு எல்லாரும் பேட்டில சொல்றாங்க.

இவங்க சொல்ரமாதிரி நிரந்தர சட்டம்னு ஒன்னு கெடையாது.

ஆர்டினன்ஸ் ( அவசரசட்டம்), சட்டம் – இப்பிடி ரெண்டுதான் இருக்கு.

இந்த ரெண்டுக்கும் நடைமுறையில் எந்த வேறுபாடும் இல்லை. சட்டத்தின் மூலம் என்ன அதிகாரம்- சலுகை கெடைக்குமோ, அதே அதிகாரம்- சலுகை ஆர்டினன்ஸ் மூலமே கெடைச்சுரும்.

அவசரச் சட்டம் என்பது ( ஆர்டினன்ஸ் ) என்பது சட்டமன்றம்/பாராளுமன்றத்தைக் கூட்டாமல் அவசரமாகக் கொண்டு வரப்படுவது.

அப்படிக் கொண்டு வரப்படும் அத்தனை சட்டங்களும் ஆறு மாதத்திற்குள் சட்டமன்றத்தை/ பாராளுமன்றத்தைக் கூட்டி முறைப்படி சட்டமாக்கப்படும்.

இதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படியான சட்டம் இயற்றும் முறை.

அதன்படி ஜல்லிக்கட்டுவை உடனடியாக நடத்த அவசரச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதைக்கொண்டு முழு உரிமையுடன் எந்தத் தடையும் இல்லாமல் ஜல்லிக்கட்டினை நாம் நடத்திக் கொள்ளலாம்.

இந்த அவசரச்சட்டத்தின் பயன்பாட்டு காலம் 6 மாதங்கள் மட்டுமே என்பதால் அதற்கு முன் சட்டமன்றம்/பாராளுமன்றம் கூடி அதனை மசோதாவாக தாக்கல் செய்து ஓட்டெடுப்புக்கு விட்டு சட்டமாக்க வேண்டும்.

இந்தியாவில் கொண்டு வரப்படும் எல்லா அவசரச் சட்டத்திற்கான விதி முறை அதுதான்.

அதையே இங்கும் பின்பற்றுகிறார்கள். இந்த ஜல்லிக்கட்டு தடை நீக்கச் சட்ட மசோதாவைப் பொறுத்தவரை எல்லா கட்சிகளும் இதனை ஆதரிப்பதால் அடுத்த சட்ட மன்றக் கூட்டத்தில் எளிதாக நிறைவேறிவிடும்.

அவசர சட்டம்(ஆர்டினன்ஸ் )கொண்டு வரும் அரசாங்கம் எல்லாம் சட்டமன்றம் கூடும் போது அதை சட்டமன்றத்தை கூட்டி மசோதா அறிமுகப்படுத்தி, ஓட்டெடுப்புக்குவிட்டு, சபையில் நிறைவேறிய சட்டமாக மாற்றியேதீரும்

அவசர சட்டம்(ஆர்டினன்ஸ் )கொண்டு வந்ததிலேயே நூறு சதவீத சட்டச்சிக்கலும் தீர்ந்து விட்டது.

இந்தச் சூழலில் ” நிரந்தர” சட்டத்துக்குப் போராடுறோம் என்பது பொருள் இல்லாதது.

Share Button
Likes(0)Dislikes(0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *