home செய்திகள், முகநூல் பதிவுகள் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 217வது குருபூசை விழா

மாமன்னர் மருதுபாண்டியர்களின் 217வது குருபூசை விழா

அனைத்து முக்குலத்து சொந்தங்களுக்கும் மாமன்னர் மருதுபாண்டியர்கள் ஜெயந்தி நல்வாழ்த்துகள்!

நம்பிவந்தவருக்காக சிவகங்கைச்சீமையில் வெள்ளையனை எதிர்த்து சிவகங்கைச்சீமையை கட்டிகாத்து
போர் புரிந்து தூக்கு மேடையில் உயிர்தியாகம் செய்த மாமன்னர் மருதுபாண்டியர்.

,,,***சொந்தங்களே கேளுங்க தென்சீமைக் கதையை கேளுங்க………
சிவகங்கை சீமை மருதிருவர் கதைய கேளுங்க…………
வீரன் என்பார் சூரன் என்பார் மருதுக்கு இணை யாரு,,?
மருதை போல பூமியில் வாழ்ந்தவர் யாரு கூறு…?
நல்ல உள்ளம் கொண்டவர்கள் தமிழ்நாடு போற்றும் நல்லவர்கள்……….
மறத்தமிழனின் மானம் காத்த மன்னவர்கள்
நரிகுடி என்ற முக்குலம் இவர்கள் பிறந்த இடமே
வீரத்தாய் பொன்னாத்தாள் மருதை பெற்ற தெய்வமே
பழனியப்ப தேவர் இந்த மருதுவின் தந்தை
இவர்கள் வீரர்களாக மலர்ந்தது தான் தென்னகத்தின் விந்தை
அண்ணன் தம்பி இருவருமே அன்பு கொண்டு வளர்ந்தார்கள்
சிறுவயது பருவத்திலே துரு துருவென இருப்பார்கள்
சேது நாட்டு புலவர் ஒருவர் இவர்கள் திறமையினை கண்டார் .
மருதிருவர் என்று பெயர் சூட்டி மன மகிழ்ச்சி கொண்டார்
சின்ன மருது பெரிய மருது இளமை வயதை அடைந்தார்கள்
இருவருமே இணை பிரியா இமயமென திகழ்ந்தார்கள்
இவர்கள் தெய்வபிறவி என்று ஊர் மக்கள் பேசிவந்தார்கள்
தாய் தந்தை இருவருமே பெருமகிழ்ச்சி கொண்டனர்
சேது நாட்டு போர் படைக்கு தளபதி மருதிருவர் தந்தை
சூரக்கோட்டை போர்க்களத்தில் மருது பயிற்சி பெற்றனர் ,
வளரி வீச்சில் வென்றனர் .
முறையான வாள் பயிற்சி கற்றனர்
சேதுபதி மன்னர் இவர்களின் திறமையினை கண்டார்
மன்னர் சோதனைகள் பல வைத்தார்
மருதிருவர் சாதனையை கண்டார்கள்
சேது நாட்டின் போர்ப்படையில் சிறந்த வீரர்கள் என்றார் மன்னர்…………
தாய் தந்தை சேதுபதி மன்னர் ஆசிபெற்று சிவகங்கை சீமை நோக்கி மருது இருவர் சென்றனர்………..
மன்னர் முத்து வடுகநாதர் இருவரையும் கண்டார்……….
வருங்கால தளபதிகளே வாருங்கள் என்றார்………..
மருதுபாண்டியரின் பல போர்களை மன்னர் கண்டார்…………
மன நம்பிக்கையும் கொண்டார்
வேலுநாச்சியாரிடமும் பெருமிதமாக சொன்னார்………..
வீர தமிழ் புலிகள் என்று மகிழ்ச்சிக்கொண்டர்
சிவகங்கை போர் படைக்கு தளபதி நீங்கள் என்று சொன்னார்………
தளபதிகள் மருதிருவர் பல போரில் வென்றனர்………
பரங்கியரின் படையை பதற தான் வைத்தனர்……….
பொறாமையா நவாபு போர்தொடுத்தார் வீராப்பாய்
தோல்வி கண்டு துவண்டு விட்டார் ஆற்காட்டு நவாப்………….
மாற்றானின் சூழ்ச்சிகளால் மன்னர் மறைந்தார்…………
வேலுநாச்சியார் , மருது பாண்டியர் வீறுக்கொண்டு எழுந்தனர்………..
பரங்கியரை விரட்ட பாளையக்காரர்களை சேர்த்தனர்………..
பதட்டம் கண்ட நவாபு பயந்து ஓடிட்டார்
வேலுநாச்சியார் அமைதி ஆட்சி கண்டார்………….
நாட்டு மக்கள் அனைவரும் நலமுடனே வாழ்ந்தனர்………….
ராணி வேலு நாச்சியாரே மருது திறமையினை பார்த்து…………
நாட்டை ஒப்புக்கொள்ளுமாறு மருது பாண்டியரிடம் சொன்னார்…………..
பிறகு மருது பாண்டியர்கள் சிவகங்கை சீமையின் மன்னர்கள் ஆனார்கள்…….
இந்த மண்ணில் பிறந்த சாதாரண மனிதர்களின் வாழ்க்கை……………
அவர்கள் சந்திக்கும் மரணத்துடன் முடிந்துவிடுகிறது …………
ஆனால் சரித்திரம் படைத்தவர்களின் வாழ்க்கை………..
அவர்கள் மரணத்திற்கு பின்னும் வாழ்கிறது ..
கால நடையில் காணாமல் போனவர் பலர் ..
காலம் நடக்க நடக்க புதிது புதிதாய் தோன்றும்……..
மனிதர்களின் நினைவில் கலந்து வாழ்பவர் சிலர் ……….
அந்த சிலரில் இருவர் தான் தென்னகத்து சிங்கங்கள்…………….
நம் சிவகங்கை சீமையின் ராஜாக்கள்
மாமன்னர் மருது பாண்டியர் .. இவர்கள்
சிவகங்கையை 20 வருடங்கள் ஆட்சி செய்த
காலத்தில் அறநெறி தவழ்ந்தது , வறுமை ஒழிந்தது …………
வாண்மை சிறந்தது , செம்மை வளர்ந்தது ,
நன்மை விளைந்தது , நாடு செழித்தது .
மருது பாண்டியர்கள் புகழ் எட்டுத்திக்கெல்லாம்………….
செந்தமிழ் நாடெல்லாம் பரவியது ..
இந்த வீர தேவர்கள் மண்ணில் புதைக்கப்பட்டாலும்……………
வீரர்கள் புதைகப்படுவதில்லை விதைக்கப்படுறாங்க …..,……

Share Button
Likes(0)Dislikes(0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *