home செய்திகள், முகநூல் பதிவுகள், வரலாறு ” முதுகுளத்தூர் அரசியல்” நூல் தயாரிப்பு | நண்பர்களின் உதவியை எதிர்பார்க்கிறேன்

” முதுகுளத்தூர் அரசியல்” நூல் தயாரிப்பு | நண்பர்களின் உதவியை எதிர்பார்க்கிறேன்

“முன் வெளியீட்டுத் திட்டம்”

நண்பர்களே!
” முதுகுளத்தூர் அரசியல்” நூல் தயாரிப்பு வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நூலை வெளிக்கொண்டு வருவதில் பொருளாதாரத் தடைகள் குறுக்கிடுகின்றன. நண்பர்களின் உதவியை எதிர்பார்க்கிறேன்.
மிகப் பெரிய பொருளாதார பின்புலம் இல்லாத நண்பர்களின் கூட்டு முயற்சி இது.

காலங்காலமாக கட்டமைத்த வரலாற்றுத் திரிபுகளை ஆதாரப்பூர்வமாக மறுத்துரைக்கும் நூல் இது.

முதுகுளத்தூர் கலவரம், அதன் சமூக – அரசியல் பின்னணி பற்றியும், காங்கிரஸ் – காமராசரின் அதிகார மற்றும் சாதிய அரசியலை ஆதாரத்தோடு அம்பலப்படுத்தும் நூல் இது.

முதுகுளத்தூர் கலவரம், முதுகுளத்தூர் பயங்கரம், சமூக நீதிப் போராளி இமானுவேல் தேவேந்திரர் போன்ற நூல்களில் புனையப்பட்ட வக்கிரங்களையும், மறைக்கப்பட்ட உண்மைகளையும் வெளிக்கொண்டு வரும் முயற்சி தான் இந்த நூல்.

பசும்பொன் தேவர் அவர்களின் அரசியல் சிந்தனைகள், அவர் ஆற்றிய பணிகள் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

இமானுவேல் சேகரன் கொலை வழக்கு பற்றிய முழுமையான தீர்ப்பு இந்நூலில் இடம் பெறுகிறது.

வாய்ப்புள்ளவர்கள் குறைந்தது 10 படிகளுக்கான தொகையை முன் வெளியீட்டுத் திட்டத்தில் செலுத்தினால் எமக்கும் சுமை குறையும். நூலின் விலை. உ௹ 100/- (நூறு மட்டும்).

உங்களின் ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறேன்.

தோழமையுடன்
இரா. மருது பாண்டியன்
8012 635706.

மருதுபாண்டியன் இரா.

Share Button
Likes(0)Dislikes(0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *