home வரலாறு அகத்தா மறவர் சரித்திரம்!

அகத்தா மறவர் சரித்திரம்!

அகத்தா மறவர் சரித்திரம்!
÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
மறவர் என்றோர் இனமுண்டு ! அவர்க்கு
மாற்றோரிடத்தும் மணமுன்டு !!
என மறவர் குழுமத்தில்எவருக்கும் இல்லாத நீண்ட பாரம்பரிய தியாக வரலாறு ..மறவர்களில் ” அகத்தா மறவர்” எனும் பிரிவுக்கு உண்டு!
அவர்கள் நானிலம் போற்றி வாழ்ந்த குடியினர்,… சீரிய மொழியினர்…,இவர்களுக்கு என்று மறவர்குழுமத்திலே. . தனி வரலாறும் உண்டு! . மறவரில் மிகவும் பழமையான குடி, அகத்தா மறவர் குடி! இதற்கு அனேக உதாரணங்கள் உள்ளன!

மறவர்கள் கோட்டைகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். எனவே அந்த கோட்டைகளின் தன்மைகளுக்கு ஏற்ப பல உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.

மறவர்கள். ….
அகத்தா கோட்டை மறவர்,
கொண்டையன் கோட்டை மறவர்,
கருதன் கோட்டை மறவர்,
செக்கோட்டை மறவர்,
அணில் ஏறாக்கோட்டை மறவர்,
உப்புக் கோட்டை மறவர்,
செவ்வேற் கோட்டை மறவர்,
இது போன்ற பிரிவுகள் அடங்கும்.

கூடல் வேள்!
“””””””””””””””””””
சங்க காலம் என்று கருதப்படுகின்ற கி.மு. 3ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த நடுகற்கள் எவையும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இக்கண்டுபிடிப்பின் மூலம் சங்க இலக்கியங்களில் நடுகற்கள் பற்றிக் குறிப்பிடப்படும் செய்திகள் சமகாலத்தில் நடைமுறையில் இருந்தவையே என்பது நிரூபணமாகிறது. இது மட்டுமன்றித் தமிழ் எழுத்துகளின் அரசு சார்ந்த, நிறுவனமயமாக்கப்பட்ட வளர்ச்சி என்ற பொருண்மைக்கும் நடுகல் வழிபாட்டை அரசு என்ற நிறுவனம் சுவீகரித்துத் தனக்குச் சாதகமாக எவ்வாறு பயன்படுத்திக் கொண்டது என்பது போன்ற சமூக அரசியல் வரலாறு குறித்த ஆய்வுப் பொருண்மைகளுக்கும் இக் கல்வெட்டுக் கண்டுபிடிப்பு துணை செய்கின்றது. இந்நடுகற்களுள் முதலாவது நடுகல்லில் “வேள் ஊர் அவ்வன் பதவன்” என்றும், அடுத்த நடுகல்லில் “அன் ஊர் அதன்.. அன் கல்” என்றும், மூன்றாவது நடுகல்லில் “கல் பேடு அந்தவன் கூடல் ஊர் ஆகோள்” என்றும் பொறிக்கப்பட்டுள்ளன. இம்மூன்று நடுகற்களும் இறந்து போன வீரர்களின் நினைவுச் சின்னங்களாக எழுப்பப்பட்ட கற்கள் ஆகும். இவற்றில் உருவம் எதுவும் பொறிக்கப்படவில்லை. ஆயினும் வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நடுகல் கல்வெட்டில் கூடலூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள், மாட்டு மந்தைகளை (ஆனிரையை)க் கவர்ந்து செல்ல முயன்ற போது அந்தவன் என்பவன் ஆனிரையை மீட்டு அந்தப் பூசலில் இறந்து போன செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. வைகை அணைக்கட்டுக்கு அருகிலுள்ள கூடலூர்ப் பகுதியில் ஆனிரை கவரும் கள்வர், மறவர் போன்ற குலத்தவர்கள் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ளனர். சங்க இலக்கியமாகிய புறநானூறு 347ஆம் பாடலில் ‘மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல்’ என்ற ஒரு குறிப்பு உள்ளது. இப்பாடலில் குறிப்பிடப்படும் கூடல் மேற்குறித்த கூடலூராக இருக்கலாம். மறவருள் ஒரு பிரிவினராகிய அகத்தா மறவர் பிரிவினரின் மூதாதையாக இந்த அகுதையைக் கருதுவதில் தவறில்லை. அகுதை என்ற குறுநிலத் தலைவன் ஒருவன் ‘பொன்புனை திகிரி’ (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் (‘அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ’) கூறப்பட்டுள்ளது. மறவர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது. இத்தகைய ஆனிரை கவரும் மறவர்களின் ஆகோள் மரபினைப் பற்றிச் சிலப்பதிகாரம் வேட்டுவ வரியில் தெளிவான குறிப்புகள் உள்ளன. இத்தகைய கள்வர்-மறவர் மரபினரால் கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளைக் காத்து மடிந்த வீரனைப் பற்றியதே இந்த நடுகல் என்பது புலனாகிறது. இந்நடுகல் எந்த அரசரின் ஆதரவுடன் எழுப்பப்பட்டது என்ற விவரம் கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லை. ஆயினும் பெருவேந்தர்களின் ஆதரவுடன்தான் இந்த நடுகல் எழுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று நாம் ஊகிப்பது எளிது.

இக் கல்வெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள பிராமி எழுத்து முறை கி.மு. 3ஆம் நூற்றாண்டில் அசோகப் பெருவேந்தனால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதாகும்.

(பின்குறிப்பு:
அகத்தா மறவர்களின் மண்டபம் திருப்பரங்குன்றம் கோயில் அருகில் உள்ளது.அகத்தா மறவர்கள் திருப்பரங்க்குன்றம்,திருச்சுழி,வருசநாடு,வத்திரயிருப்பு,அருப்புக்கோட்டை பகுதியில் கானப்படுகின்றனர்)

அகுதை ஆண்ட கூடல்,…மதுரை!
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””
புறம் 347, 5-7 அகுதை கூடலை ஆண்டதாகக் கூறுகிறது. புறம் 233, 2-4 அகுதை திகிரி (சக்கராயுதம்) வைத்திருந்தும் போரில் இறந்தான் என்று கூறுகிறது. அகம் 76, 2-3 அகுதை கள்ளோடு இருப்பான் என்றும், அகம் 113, 4-8 அவன் நாடு பழமையானது என்றும் கூறுகிறது. மேலும் அவன் நாடு எப்பொழுதும் பரபரப்பாக இருக்குமென்றும், கோசர்கள் அவன் பாதுகாவலர்களாக இருந்தார்கள். அகம் 208, 5-9 & 15-18, கூறுகிறது, அவன் நண்பன் வெளியன் வேந்தன் ஆஅய் எயினன், மிஞிலியொடு போரில் இறந்ததால், அகுதை, மிஞிலியை பலிவாங்க அவனோடு போரிடுகிறான். இந்த ஜந்து பாடல்களில், புறம் 347 அகுதை, கூடலை ஆண்டான் என்றும் மற்ற பாடல்கள் அவன் படையின் வலிமையைப் பற்றியும், அவன் ஆண்ட கூடல் பழமையானது என்றும் கூறுகிறது.

நாம் அகுதை ஆண்ட கூடல் எங்கு உள்ளது என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். அகம் 296, 10-13, கொற்கை வேந்தன் நெடுந்தேர் செழியன் கூடலை கைப்பற்றியதாகக் கூறுகிறது. 2378 சங்க பாடல்களில் கூடல் என்ற பெயர் 28 பாடல்களில் வருகிறது. இந்த 28 பாடல்களில் 27 பாடல்களில் வழுதி கூடல், செழியன் கூடல், பாண்டியன் கூடல், பஞ்சவர் கூடல் என்று பாண்டிய மன்னர்களை குறித்தே கூறுகிறது. கபிலர் பாடிய புறம் 347 மட்டும் அகுதை கூடல் என்று கூறுகிறது. கொற்கை வேந்தன் பாண்டியன் நெடுந்தேர் செழியன் கூடலைக் கைப்பற்றியதாக அகம் 296 கூறுகிறது. அதன் பின் கூடல் பாண்டியர்களின் தலைநகராக மாறுகிறது. அதனாலேயே சங்க இலக்கியங்கள் பாண்டியர்களை கூடலோடு இணைத்துக் கூறுகிறது.

பாண்டியர்கள் கூடலை மதுரை (மதுரை காஞ்சி மற்றும் திருமுருகாற்றுப்படையில் மதுரை, கூடல் என்று இரு பெயரும் பயன்படுத்தப்பட்டுள்ளது – மதுரை காஞ்சி 429-430, திருமுருகாற்றூப்படை 70-71) என்று பெயர் மாற்றி அழைத்தனர். இது மதுரையின் மூலப் பெயர் கூடல் என்பது தெளிவாகிறது. கூடல் என்ற பெயர்க் காரணமான confluence of two or more rivers ம் பொருந்துகிறது.

மதுரை “அகத்தா மறவன்” அகுதைக்கு உரியது!
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

மதுரை யாருக்குரியது? மதுரையின் பழைய பெயர் கூடல். இக்கூடல் சீறூர் அகுதை என்ற வேளிர் குல அரசனுக்குரியது. மதுரையின் பழைய பெயரை அகநானூற்றுப்பாடல்கள் (296,93) சுட்டுகின்றன.

“மலைபுரை நெடு நகர்க் கூடல் “(அகம் 296/12)

கூடல் அகுதைக் குரியது என்பதைப் புறநானூற்றுப்பாடல் குறிப்பிடுகிறது.

எறிந்தலை முறிந்த ததுவாய் வேலன்
மணநாறு மார்பின் மறப்போ ரகுதை
குண்டுநீர் வரைப்பிற கூடலன்ன (புறம். 347 / 4-6)

இந்த அகுதையடமிருந்து கூடல் நகரை முதலில் கைப்பற்றியவன் நெடுஞ்தேர்ச்செழியன் என்ற கொற்கைப் பாண்டியன். கூடல் அகுதை காலத்திலேயே மிகவும் புகழ்ப்பெற்றிருந்தது. பின்னரே பாண்டியர்களால் கைப்பற்றப்பட்டு ஆளப்பட்டது. அகுதை வளம்பெற்ற ஊரின் மன்னராகப் புகழ்பெற்றிருந்த காலத்தில், மகட்கொடை வேண்டி பாண்டிய வேந்தர் அவர்களிடம் போரிட்டு அவர் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர்.

வளமான கூடலைக் கைப்பற்றிய பின்னர். பாண்டியர், பல போர்களில் ஈடுபட்டு பல ஊர்களையும் வணிக நகரங்களையும் கைப்பற்றுவதில் ஈடுபட்டனர்.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் நாள்தோறும் பல கொடிய வினைகளைப் புரிந்தான். பகைவர் நாட்டிலிருந்த நன்றாகத் தொழிலமையைக் கட்டப்பட்ட உயர்ந்த இல்லங்களை எரியூட்டினான். பகைநாட்டில் உள்ள விளைந்த வயல்களையும், சோலைகளையும் நகப்புறங்களையும் எரியூட்டியதால் அதன் ஓசையும் அதனால் எழுந்த அவலக்குரலும் எங்கும் கேட்டது. மக்கள் சமைக்கும் நெருப்பைப் பெருநெருப்பு அழித்ததால், சமையல் தொழிலும் அந்நாட்டில் ஒழிந்தது. கொல்லப்பட்ட மன்னனின் மனைவியும் அவர்தம் மக்களும் உயிர் வாழ்வதற்காக வேளைக்கீரையைக் பறித்து உண்டனர். அம்மன்னனின் ஆட்சிமுடிவிற்கு வந்தது என்பதை மக்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டுக் காவற்காட்டிலுள்ள காவல் மரங்கள் கூரான கோடாரியால் பிளக்கப்பட்டு விறகாக்கப்பட்டன.

பாண்டியன் நெடுஞ்செழியன் காற்றென விரைந்து சென்று எதிரிநாடு கெட எரி பரப்பித் தலையாலங்கானத்தில் பகைவர் அஞ்சத்தங்கி அரசுபட அமருழக்கி முரசு கொண்டு களவேள்வி செய்தான். (மது. 125-130)

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் எதிரிநாட்டிலுள்ள காவலுடைய பொழிவைக் கெடுத்து, மருதநிலங்களை எரியுண்ணச் செய்து, நாடென்னம் பெயரைக் காடென மாற்றினான். (மது. 152-156)

இவ்வாறு பல போர்களில் ஈடுபட்ட பாண்டியன் நெடுஞ்செழியன் ஏழு இனக்குழு மன்னர்களை வென்று அவர் நாட்டைத் தன்னாட்டோடு இணைத்துக் கொண்டான். சேரன், செம்பியன், திதியன், எழினி, எருமையூரன் இருங்கோ வேண்மான், பொருநன் (அகம். 36/ 14-19) போன்றோரை வென்றான்.

கோசர்தலைவனா..அகுதை?
“””””””””””””””””””””””””””””””””””””””””””
இனி இந்த அகுதை மறவனை கோசர்குல மறக்குடி என்றும் சிலர் கூறுவார்!
அஃதை சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கோசர் குடித் தலைவன் மற்றும் சிறந்த வள்ளல். அவனைப்பற்றி சங்கப் பாடல்களில் உள்ள செய்திகள் பின்வருமாறு:

அஃதை முரசு முழக்கி நல்ல அணிகலன்களைப் பரிசாக வழங்குவான். [1]
கோசர் குடிமக்களில் ஒருசாரார் பெண்யானையை வைத்துக்கொண்டு ஆண்யானைகளைப் பிடித்துப் பழக்கிவந்தனர். அவர்கள் கையில் வேலேந்தி யானைகளைப் பழக்கிவந்ததால் ‘பல்வேல் கோசர்’ எனச் சிறப்பிக்கப்பட்டனர். அஃதை இந்தப் ‘புன்தலை மடப்பிடி அகவுநர் பெருமகன்’ என்று போற்றப்பட்டான். பல்வேல் கோசர் இந்த அஃதைக்குப் பாதுகாவலாய் விளங்கினர். [2]
யானைகளைப் பிடித்து அதனை பழக்கிய மறவர்களை மற்றும் கள்ளர்களை வரலாற்றில் நிறையக்காண்கின்றோம்! ..கள்ளர்குலத்தலைவர்கள் தொண்டைமான்கள் இத்தகைய வமிசத்தில் வந்தோர்களாவர், அதனாலேயே இவர்களுக்கும் சேதுபதிகளுக்கும் “கஜவேட்டையாடியவர்கள் ” என மெய்கீர்த்திதனிலே சொல்லப்பட்டிருக்கிறது… இதன்வழியாக கோசர் என்பாரும் பண்டைய மறவர்குடிகளே என்பது நன்கு விளக்கமாகும்!

அகுதை தந்தை !
“””””””””””””””””””””””””
இன்னார் தந்தை என்பது பழந்தமிழர் பண்பாடாகும்! இந்த அகுதை மறவனின் தந்தையும் அதுபோல இங்கு போற்றப்படுகிறான்.
அகுதை என்பவன் பெரும் வீரன். இந்த அகுதை பாண்டியப்படை மறவன். இவனைக் கபிலர் ‘மணநாறு மார்பின் மறப்போர் அகுதை’ எனப் புறநானூற்றில் புகழ்ந்துள்ளார். இவனின் தந்தையை ‘அகுதை தந்தை’ எனப் பரணரும் குறுந்தொகையில் குறிப்பிடுகின்றார். அகுதையின் தந்தை வெள்ளிப்பூண் போட்ட தலைக்கோல் வைத்திருக்கும் ஆடல் மங்கையருக்கு பெண்யானைகளைப் பரிசாகக் கொடுத்தாராம்.
“இன்கடுங்கள்ளின் அகுதை தந்தை
வெண்கைடைச் சிறுகோல் அகவன் மகளிர்
மடப்பிடி பரிசின் மான”
என்கிறார் பரணர்.
இதில் சிறுகோல் என்பது தலைக்கோல். அதனை
“இருங்கழை இறும்பின் ஆய்ந்து கொண்டறுத்த
நுணங்கு கண் சிறுகோல் வணங்கிறை மகளிரோடு” – (அகம்: 97: 9 – 10)
என மாமூலர் அகநானூற்றில் சொல்வதால் அறியலாம். அரசர் கையில் செங்கோல் இருப்பது போல பரதக்கலையில் தலைசிறந்து விளங்குபவருக்கு கையை அலங்கரிக்கக் கொடுப்பதே தலைக்கோல்.
ஐயை தந்தை, அகுதை தந்தை என பிள்ளைகளின் பெயரைக் கூறி தந்தையரை அழைக்கும் வழக்கம் பண்டைக் காலத் தமிழரிடமிருந்து தொடர்ந்து வருகின்றது.

இந்த அகுதை வழிவந்த அகத்தா மறவர்கள், பின்னாளில் பாண்டிய மறவர்களிடம் கோயில், அரண், முதலியவற்றில் பணியைப்பெற்று பலவாறாக பட்டங்களை எய்தினர்! அவையாவன. ….
ராயர்,மணியக்காரர், சேர்வை எனவும் சிலர் வாணாதிராயர், மூவராயர், தொண்டைமான், மலையான் எனவும் விருதுப்பெயர்களைப்பெற்று வாழ்வாங்கு வாழ்ந்தனர்!…. அவற்றை மற்றொரு பதிவில் காண்போம்!

அகத்தா மறவர் பரவலாக இருக்கும் இடங்கள், “”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

தேனி:
கண்டமனூர் ,
போடிநாயக்கனூர் ,
கடமலைகுண்டு ,
பெரியகுளம்
திண்டுக்கல் :
கொடைரோடு ,
வீ .சந்தையூர் ,
கே .ராஜதானி கோட்டை
,நத்தம் கோவில்பட்டி
,வீ.ராஜதானிகோட்டை,
மதுரை :
பிறையூர்,
ஏழுமலை,
சாப்டூர்,
உத்தப்ப நாயக்கனூர்,
சேலம் , நாமக்கல் ,
அருப்புகோட்டை ,
திருப்பரங்குன்றம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகள் மற்றும் நெல்லை, செங்கோட்டை,சங்கரன்கோவில் பகுதிகள்.

வாழ்க! முக்குலத்து மறவர்குலம்! வாழ்க! அகத்தா மறவர் இனம்! !

-×——–×——–×———-×———–×——-×——×-

Share Button
Likes(3)Dislikes(0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *